மார்ட்டின் உதவியாளர் மரண வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு

மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரணம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மார்ட்டின் உதவியாளர் மரண வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு
Published on
தந்தையின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி'க்கு மாற்றக்கோரி இறந்த பழனிசாமியின் மகன் ரோஹன்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, பழனிசாமியின் மரணம் தொடர்பான அறிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர். வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், பழனிசாமி மரண வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற மறுத்துவிட்டனர். மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விசாரணையில் திருப்தி இல்லாவிட்டால் பழனிசாமியின் மகன் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்தனர். மேலும், பதப்படுத்தப்பட்டுள்ள பழனிசாமி உடலை பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு முடித்து வைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com