150 சவரன் நகை கொள்ளை.... சிவகங்கையை அதிரவிட்ட 150 சிசிடிவி - வெளியான திடுக் தகவல்

x

ஆசிரியர் வீட்டில் 150 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டுள்ளனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள தில்லைநகரைச் சேர்ந்தவர் ஞானசேகரன். தனியார்ப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டு லாக்கரில் இருந்த 150 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தேவகோட்டை முதல் திருச்சி வரையிலான சுமார் 150 சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் இருவரைக் கைது செய்தனர். விசாரணையில் திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த நாகராஜ் மற்றும் அழகுராஜ என்ற இருவரைக் கைது செய்தனர். இதில் நாகராஜ் கொலை வழக்கில் சுமார் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து சமீபத்தில் வெளியே வந்து இருக்கிறார். அழகுராஜ் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. விலையுயர்ந்த லாக்கரை வாங்கி அதில் நகைகளைப் பத்திரமாக வைத்த ஞானசேகரன் அதன் சாவியை வெளியே வைத்துச் சென்றதன் காரணமாகத் தான் கொள்ளை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கொள்ளை போன நகைகளில் 90 சவரன் நகைகளை மீட்டுள்ளதாக தேவகோட்டை டிஎஸ்பி பார்த்திபன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்