பேங்கில் கவரிங் நகையை வச்சே ரூ.3 கோடி.. தி.மலையில் மிரளவிட்ட சம்பவம்

x

கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.3 கோடி மோசடி - மூவர் கைது

திருவண்ணாமலை காந்திநகர் மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து 3 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில் வங்கியின் பெண் மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடிக்கு

உடந்தையாக செயல்பட்ட வங்கி மேலாளர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் கோபிநாதன் மற்றும் ஏஜெண்ட் ஏழுமலை ஆகிய மூவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்