விடிந்தால் திருமணம் - கடைசியில் ட்விஸ்ட் கொடுத்த மாப்பிள்ளை குடும்பம்.. ராம்நாட்டில் அதிர்ச்சி

x

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், திருமணத்தை மணமகன் வீட்டார் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாண்டி - குஷியாகாந்தி ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், திடீரென மணமகன் வீட்டார் திருமணம் நடைபெறாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரில் போலீசார் விசாரித்த நிலையில், மணமகன் பாண்டி சம்மதித்ததால் திருமண வேலைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் திருமணம் நடைபெறவிருந்த கோவிலுக்கு மாப்பிள்ளை வீட்டார் வராத நிலையில், அவர்களது செல்போன் எண்களும் அணைத்து வைக்கப்பட்டன. இதுதொடர்பாக மணப்பெண் வீட்டார் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்