#JUSTIN || நெருங்கி வரும் ஃபெஞ்சல் புயல் - அடியோடு மாறிய ECR-ன் நிலை
புதுவை - சென்னை கிழக்கு கடற்கரை சாலை கனகசெட்டிகுளம் மற்றும் காலப்பட்டு பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் தொடர்ந்து நேற்று இரவு முதல் இந்த பகுதிகளில் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன் தேசிய நெடுஞ்சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது இதன் காரணமாக வாகனங்கள் இந்த பகுதியில் கடக்கும் பொழுது ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றன. புதுச்சேரிக்கும் மகாபலிபுரத்துக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மேலும் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரால் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.