கணவர் பெயரில் பல லட்சங்களில் நடந்த மோசடி - மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்
திருப்பூரில் தனது கணவரின் பெயரில் வருமான வரி செலுத்தி வந்ததாக அவர் பணியாற்றும் நிறுவனத்தின் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். செட்டிபாளையத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி கவுதமி, மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தபோது, அவருடைய கணவர் வருமான வரி செலுத்துவதாக கூறி அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, கணவர் கணேசன், தனது நிறுவனத்தின் உரிமையாளர் பாலகண்ணனிடம் கேட்டதற்கு அவர் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், பணத்தை கையாடல் செய்ததாக போலீசில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே, நிறுவனத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கவுதமி மனு கொடுத்துள்ளார்.
Next Story