மனைவி பின்னாடியே பாலோ செய்த கணவன்.. கடைசியில் கண்ட காட்சி.. பார்த்த நொடி பூமியில் பீறிட்ட ரத்தம்
கோவை மாவட்டம், சூலூர் அருகே மனைவியின் தகாத உறவால் ஆத்திரமடைந்த கணவர், கள்ளக்காதலனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கருமத்தம்பட்டி வடுகன்
காளிபாளையத்தில் வசித்து வந்த முனியாண்டி என்பவருக்கும், முருகவேல் என்பவரின் மனைவிக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முனியாண்டியின் வீட்டுக்கு மனைவி சென்றதை அறிந்து, அங்கு முருகவேல் சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, முருகவேல் தாம் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதில் காயமடைந்த முனியாண்டி, மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, முருகவேலை போலீசார் கைது செய்தனர்
Next Story