மழை நீரில் மிதக்கும் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் - அதிர்ச்சியில் விவசாயிகள்
மன்னார்குடி அருகே 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். காரக்கோட்டை, சின்ன காரக்கோட்டை, உடையார்தெரு, ராணித்தோப்பு ஆதனூர் மண்டபம், சித்தமல்லி,கோவில்வெண்ணி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் வளரத்தொடங்கியது. இந்த நிலையில் தற்போது பெய்யும் மழையால், 500 ஏக்கரில் தேங்கிய மழை நீர் இன்றும் வடியவில்லை. வாய்க்கால் தூர்வாரப்படாததால் மழை நீர் வடிய வழியின்றி நிற்பதால், வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. வாய்க்கால்களை உடனடியாக தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story