இரும்பு கதவில் சிக்கிய கை- போதை ஆசாமி மீட்பு

x

சென்னை குமரன் நகர் பகுதியில் இரும்பு கதவில் கை சிக்கி உயிருக்கு போராடிய போதை ஆசாமியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த சேகர் மதுபோதையில் குமரன் நகர் வீடுகளில் திருடும் நோக்கில் நுழைந்ததாக தெரிகிறது. அப்போது வீட்டு உரிமையாளர் பார்த்துவிட்டதால் தப்பிக்க எண்ணி ஒவ்வொரு மாடியாக சென்ற சேகர், கட்டடம் கட்டும் சாரம் வழியாக தப்ப முயன்றபோது இரும்பு கதவில் கை சிக்கி மாட்டிக்கொண்டார். ரத்தம் சொட்டியதால் வலியில் அலறித் துடித்த அவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்