மெல்ல மெல்ல நெருங்கும் ஃபெஞ்சல் புயல் - நடுங்க வைக்கும் காற்றின் வேகம்
கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
கடலூர் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
காலை முதல் மிதமாக மழை பெய்து வந்த நிலையில் தற்பொழுது காற்றுடன் கூடிய கனமழையாக பெய்து வருகிறது.
கடலூர் கடலோரப் பகுதிகளான தாழங்குடா, தேவனாம்பட்டினம், சோனாங் குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த மழை இரவு முழுவதும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story