எதற்காக குழந்தையை கடத்தினார்?.. பெண் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

கள்ளக் காதலனுக்கு வாரிசு வேண்டும் என்பதற்காக கர்ப்பமாக இருப்பதுபோல் நடித்து, பச்சிளங் குழந்தையை கடத்திச் சென்றதாக...
x

எதற்காக குழந்தையை கடத்தினார்?.. பெண் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

கள்ளக் காதலனுக்கு வாரிசு வேண்டும் என்பதற்காக கர்ப்பமாக இருப்பதுபோல் நடித்து, பச்சிளங் குழந்தையை கடத்திச் சென்றதாக, கேரளாவைச் சேர்ந்த பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

பொள்ளாச்சியை சேர்ந்த யூனிஸ்-திவ்யபாரதி தம்பதியருக்கு சில நாட்களுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தை, மர்ம நபர்கள் 2 பேரால் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்டது.

இதனையடுத்து, 12 தனிப்படைகள் அமைத்து தேடுதலில் ஈடுபட்ட போலீசார், இன்று காலை கேரள மாநிலம் கொடுவாயூரில் குழந்தையை மீட்டனர்.

குழந்தையை கடத்தி சென்றது தொடர்பாக கொடுவாயூர் பகுதியைச் சேர்ந்த ஷமீனா உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து செய்தனர்.

குழந்தையைக் கடத்திய ஷமீனாவிடம் போலீசார் விசாரணை செய்ததில், அவர் தனது கள்ளக்காதலனுக்கு வாரிசு வேண்டும் என்பதற்காக குழந்தையை கடத்தியதாக வாக்குமூலம் அளித்து உள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் தான் வாழ்ந்து வந்ததாகவும், அப்போது மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் ஷமீனா கூறி உள்ளார்.

மணிகண்டன் தனக்கும் வாரிசாக ஒரு குழந்தை வேண்டுமென கேட்டதால், தான் கர்ப்பமாக இருப்பது போல் நடித்து வந்ததாகவும்,

இந்நிலையில், தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக மணிகண்டனிடம் பொய் கூறியதாகவும், அவர் தெரிவித்து உள்ளார்.

மணிகண்டனிடம் குழந்தையைக் காட்ட வேண்டும் என்பதற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தையை கடத்திச் சென்றதாகவும் கைதான பெண் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்