கனகசபை மீது நின்று தரிசனம் செய்வது பற்றிய திட்டம் - சென்னை ஹைகோர்ட் போட்ட உத்தரவு | Chennai High Court
சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்வது தொடர்பான திட்டத்தை தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்பினருக்கு டிசம்பர் 12ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நேரம், நடைமுறைகள் குறித்த திட்டத்தை தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டிருந்தது.
Next Story