BREAKING || சென்னையில் மாநகர பேருந்தில் சிக்கி மூதாட்டி பலி... தி.நகரில் பேரதிர்ச்சி
சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி மூதாட்டி உடல் டயருக்கு அடியில் சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தி.நகரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் மாநகர பேருந்து (எம் 27) இன்று இரவு தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
அப்போது நடந்து சென்ற மூதாட்டி ஒருவர் மீது அந்த பேருந்து மோதியது. அதில் மூதாட்டி உயிரிழந்தார். ஆனால் அவரது உடல் பேருந்தின் டயருக்கு அடியில் சிக்கி கொண்டது.
இதனால் மூதாட்டியின் உடலை போலீசாரால் மீட்கமுடியவில்லை. தீயணைப்புத்துறையினர் வந்து மீட்கும் முயற்சியில் ஒரு மணி நேரமாக போராடி வருகின்றனர்.
இதனால் தி.நகர் பேருந்து நிலையம் பரபரப்போடு காணப்படுகிறது.
Next Story