விடாமல் அடிக்கும் மழை.. கொரட்டூர் பகுதியை சுத்துப்போட்ட வெள்ளம்..!! | Chennai

x

சென்னை புறநகர் பகுதியான கொரட்டூரில் நேற்று காலை முதல் செய்த பலத்த மழை காரணமாக கொரட்டூர் வடக்கு அவென்யூ பகுதியில் குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்து பொதுமக்களை கடும் இன்னலுக்கு ஆளாகியது இந்நிலையில் நேற்று இரவு முதல் மழை என்ற காரணத்தினால் ஓரளவு மழை நீர் வடிந்து இதனால் அப்பகுதியில் நேற்று காலை முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது மேலும் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் காலை படகுகள் மூலம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர் இதனால் பொதுமக்கள் குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர் இப்பொகுதியில் 7 ராட்சத மோட்டார்கள் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இன்று இரவுக்குள் முழுவதுமாக தண்ணீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்