நண்பர்கள் சண்டை போட்டதால் அரசு பேருந்து கண்ணாடியை கல்லெறிந்து உடைத்த சிறுவன் - சென்னையில் பரபரப்பு
சென்னை, புது வண்ணாரப்பேட்டையில் மாநகரப் பேருந்தின் கண்ணாடி மீது கல் எரிந்த சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டது.
லஷ்மி அம்மன் கோவில் நிறுத்தம் அருகே சென்றபோது பேருந்தின் கண்ணாடி மீது கல் எரிந்த 17 வயது சிறுவனை பொதுமக்கள் உதவியுடன் ஓட்டுனர் துரத்தி சென்று பிடித்தார்.
பள்ளி நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையில் பேருந்து மீது அவன் கல் எரிந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story