இரு பள்ளிகளுக்கு இடையே பெரிதான `கேங் வார்’.. வெறியோடு மோதிக்கொண்ட மாணவர்கள்

x

ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட மாணவர்கள் - அதிர்ச்சி காட்சி

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்ணார்காடு பகுதியில் இரண்டு பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், இவ்விரு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இடையே அவ்வப்போது சிறு சிறு மோதல் ஏற்படுவதுண்டு . இந்த நிலையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை பெரிதாகி இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கும்பலாக மோதிக்கொண்டனர். இதைக் கண்ட அப்பகுதியினர் மாணவர்களை அப்புறப்படுத்தி, மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்