மகளை பல முறை மிரட்டி சீரழித்த கொடூர சித்தப்பா... குமரியில் அதிர்ச்சி
கன்னியாகுமரியில் மகள் உறவான 12ம் வகுப்பு மாணவியை பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய சித்தப்பா போக்சோவில் கைது செய்யப்பட்டார். கூலித்தொழிலாளியின் 17 வயது மகள் ஒருவர், +2 முடித்து விட்டு மேற்படிப்புக்காக காத்திருந்தார். இந்த சூழலில், மாணவி வீட்டில் திடீரென மயக்கம் போட்டு விழுந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியிடம் செய்த விசாரணையில், தாயாரின் தங்கை கணவரான தேசலிங்கம், வீட்டில் தனியாக இருந்த தன்னை பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இதையடுத்து தேசலிங்கத்தை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
