இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் - பும்ரா விலகல்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. முன்னதாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் பும்ரா இடம்பெற்றிருந்த நிலையில், புதுப்பிக்கப்பட்ட அணியில் பும்ராவின் பெயர் இடம்பெறவில்லை. பிஜிடி தொடரில் காயமடைந்த பும்ரா, காயம் இன்னும் குணம் ஆகாததால், தொடரில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலாவது பும்ரா பங்கேற்பாரா என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story