FIH ஹாக்கி புரோ லீக் - போராடி தோற்ற இந்திய மகளிர் அணி
ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற FIH ஹாக்கி புரோ லீகில் Pro League, ஷூட் அவுட்டில் இங்கிலாந்து அணியிடம் இந்திய மகளிர் அணி போராடி தோற்றது. போட்டி தொடங்கிய முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து வீராங்கனைகள், ஆட்டத்தின் 40 மற்றும் 56-வது நிமிடத்தில் கோலடித்தனர். அதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவின் நவ்நீத் கவுர் மற்றும் ருதஜா தாதாஸோ பிசல் Rutaja Dadaso Pisal ஆகியோர் 53, 57-வது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தனர். தொடர்ந்து ஷூட் அவுட் முறையில் இங்கிலாந்து அணி 2-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது.
Next Story
