என்ன சொல்லப் போகிறீர் ஆளுநரே? - அமைச்சர் ரகுபதி
இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என அமைச்சர் ரகுபதி டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் பிரதமர் மோடிக்கு பாஜக ஆளாத மாநில சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா? என்றும், பேரவை நாகரிகம் கருதி, முதலமைச்சர், ஆளுநருக்கு சட்டப்பேரவையில் உரையாற்ற சபாநாயகர் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் நாகரிகம் கிலோ எத்தனை ரூபாய் என கேட்கும் அளவு நடந்து கொள்ளும் ஆளுநர் ரவி , உரையை படிக்காமல் உதாசீனப்படுத்தினார் என்றும், மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
Next Story