மொரீஷியஸில் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பளித்த மக்கள்
பிரதமர் மோடி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக மொரீஷியஸ் சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகர் போர்ட்லூயிஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, பாரம்பரிய முறைப்படி அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
தனது பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா - மொரீஷியஸ் இருநாடுகளும் ஆழமாக வேரூன்றிய கலாச்சார உறவுகளால் பிணைக்கப்பட்டிருப்பதாக கூறினார். இரு நாட்டின் நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மொரீஷியஸின்
57-வது தேசிய தின கொண்டாட்டதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
