ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நோட்டீஸ் அதிமுக அறிவிப்பு

x

ஈ.சி.ஆர். வழக்கில் அதிமுகவை பற்றி அவதூறாக பேசிய ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக அதிமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளதாக, அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குற்றவாளி அதிமுகவை சேர்ந்தவர் என காவல்துறை அதிகாரி தெரிவித்தது தவறு என்றும், கைது செய்யப்பட்டவர் திமுகவை சேர்ந்தவர் என நிரூபிக்க தயாராக உள்ளதாகவும் இன்பதுரை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்