MK Stalin | அண்ணா காலத்து தொண்டரை நேரில் அழைத்து பேசிய முதல்வர்
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக மூத்த முன்னோடியான முத்துவேல் என்பவருடன் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். முன்னதாக உடன்பிறப்பே வா நிகழ்விற்காக, ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் என்பவர் முதலமைச்சரை சந்தித்தபோது, தன் அப்பா, அண்ணா காலத்தில் இருந்து திமுகவில் இருப்பதாகவும், உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்படுதாகவும் தெரிவித்தார். அப்போதே அலைப்பேசியில் அழைத்து அவரிடம் பேசிய முதலமைச்சர், தற்போது அவரை நேரில் வரவழைத்து சிறிது நேரம் பேசிவிட்டு, பரிசளித்து வழி அனுப்பினார்.
Next Story
