BREAKING || அதிமுக, பாஜக பிரமுகர்கள் வீட்டில் ரெய்டு - காலையே தமிழகத்தை பரபரக்க வைத்த ED

x

புதுக்கோட்டையில் பாஜக அதிமுக பிரமுகர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

புதுக்கோட்டை சேர்ந்தவர்கள் முருகானந்தம் பழனிவேல் மற்றும் ரவிச்சந்திரன்

இவர்கள் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக முழுவதும் சோலார் தெரு விளக்குகள் அமைக்கும் ஒப்பந்தம் மற்றும் பல்வேறு நெடுஞ்சாலை பொதுப்பணித்துறை ஒப்பந்த பணிகளில் எடுத்து பணி செய்து வந்தனர் இவர்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்பட்டது

இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இவர்களது வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து வழக்கும் பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது

இதில் பல்வேறு சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடந்திருப்பதாக தெரியவந்தது தொடர்ந்து அமலாக்கத்துறை இந்த வழக்கில் தொடர்பாக விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போல இருந்து பெற்ற நிலையில், இன்று புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தம் வீடு வெட்டன் விடுதியில் உள்ள முருகானந்தம், பழனிவேல் மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோர் வீடுகளில் 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை போலீசார் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்

இதில் முருகானந்தம் பாஜக புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக உள்ளார்

பழனிவேல் அதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆகியுள்ளார்

அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தற்போது கரம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் துணை பி டி ஓ பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது

கடந்த அஇஅதிமுக ஆட்சியில் சோலார் விளக்குகள் ஒப்பந்தம் எடுத்து பணிசெய்ததாக ஆலங்குடி கே. வி. எஸ் தெருவில் உள்ள பழனிவேல் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இவர் புதுக்கோட்டையில் பெட்ரோல் பங்க் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்