தனியார் பள்ளி மாணவி கடத்தப்பட்ட விவகாரம் - பள்ளி வாகன ஓட்டுனர்கள் கைது

தருமபுரி அருகே தனியார் பள்ளி வாகன ஓட்டுனரால் கடத்தப்பட்ட பள்ளி மாணவியை போலீசார் மீட்டனர்.
x

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பிரபல தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 11ம் வகுப்பு படித்து வரும் மாணவி, பள்ளிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுக்குறித்து அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பள்ளி வாகன ஓட்டுனர் அஜித் என்பவர், தனது கூட்டாளியும், சக வாகன ஓட்டுனருமான கார்த்திக்கின் உதவியோடு சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் விசாரணையில் வாகன ஓட்டுனர் அஜீத் பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது . இதனை தொடர்ந்து பெங்களூரில் தலைமறைவாக இருந்த அஜீத்தை சுற்றி வளைத்த போலீசார், அவரிடமிருந்து சிறுமியை மீட்டனர். தொடர்ந்து அஜீத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்