உத்தரப்பிரதேசம் - பாம்பு கடித்து மூலிகை வியாபாரி பலி

x

உத்தரப் பிரதேச மாநிலம் சாஹரன்பூரை சேர்ந்தவர் 34 வயதாகும் சிக்கந்தர்நாத். சாலையோரத்தில் மூலிகைகளை விற்பனை செய்யும் சிக்கந்தர்நாத், ஒரு சில இலைகளை காண்பித்து, இதனை உண்டால் பாம்பு கடித்தால் கூட விஷம் உடலில் ஏறாது என கூறியுள்ளார்.

அப்போது அங்கு வந்த யூடியூபர் மோஹித் என்பவர்,இதனை நிரூபித்து காட்டவேண்டுமெனவும், அப்படி நிரூபித்தால் 10 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் சவால் விடுத்துள்ளார். சவாலை ஏற்ற சிக்கந்தர்நாத், பாம்பை தனது கையில் கடிக்க வைத்த நிலையில், விஷம் பரவிய சிறிது நேரத்தில் பரிதாபமாக பலியானார்.

((ப்ரீத்))

இதனை அங்கிருந்தவர்கள், செல்போனில் வீடியோ பதிவு செய்த நிலையில் யூடியூபர் மோகித் சஞ்சய் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்