மகா கும்பமேளாவில் நாளை புனித நீராடுகிறார் மோடி | Prime Minister Modi
உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி நாளை புனித நீராடவுள்ளார். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை 35 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ள நிலையில், நாளை பிரதமர் மோடி புனித நீராடவுள்ளார். காலை 10 மணிக்கு பிரயாக்ராஜ் விமான நிலையத்திற்கு வருகை தரும் அவர், மகா கும்பமேளா நடைபெறும் இடத்திற்குச் சென்று காலை 11 மணிக்கு புனித நீராடவுள்ளார். நாளைய தினம் டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி புனித நீராட இருப்பது கவனம் பெற்றுள்ளது.
Next Story