India | Srilanka | "ராமேஸ்வரம் டூ தலைமன்னார்".. இந்திய-இலங்கை மக்களுக்கு குட் நியூஸ்
ராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே கப்பல் சேவை தொடங்கப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்வானந்த சோனோவால் தெரிவித்தார். மும்பையில் நடைபெறும் கடல்சார் வார விழாவில் பேசிய அவர், ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே கப்பல் சேவையைத் தொடங்க இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில் இலங்கை கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் அநுர கருணாதிலகே பங்கேற்ற நிலையில், இருவரும் இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். ஏற்கனவே நாகை, காங்கேசன்துறை இடையே கப்பல் சேவை நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
