2 கி.மீ வரை பரவிய ஆபத்து - அலறி அடித்து ஓடிய மக்கள்.. அதிர்ச்சி காட்சிகள்
ஐதராபாத் அருகே கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பான சூழல் நிலவியது. சேர்லபள்ளியில் உள்ள தொழிற்சாலையில் மாலை 6 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கெமிக்கல் தொழிற்சாலை என்பதால் அதிகளவில் புகை வெளியேறியதால் அருகே வசித்து வந்த பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். கொளுந்துவிட்டு எரிந்த தீயின் பிழம்பு 2 கிலோ மீட்டர் தொலைவு வரை தென்பட்டதாக கூறுகின்றனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க கடுமையாக போராடினர்.
Next Story