"எங்கடா வர..!" காரை குத்தி தூக்கி வீசிய முரட்டு யானை... வெளியான பகீர் வீடியோ | Elephant Attack
கேரள மாநிலம் வயநாடு சாலையில் வந்த காரை அவ்வழியாக நின்று கொண்டிருந்த காட்டுயானை ஒன்று புரட்டி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பந்தலூரை சேர்ந்த கபூர் மற்றும் அவரது நண்பர்கள் கூடலூருக்கு காரில் வந்துள்ளனர். அப்பொழுது சாலையில் நின்றிருந்த ஒற்றை காட்டு யானை காரை தாக்கிப் புரட்டியுள்ளது. காரில் இருந்தவர்கள் அலறிய நிலையில் எதிரெதிரே வந்த வாகன ஓட்டிகள் யானையை சத்தமிட்டு விரட்டியுள்ளனர். தொடர்ந்து காரில் சிக்கி இருந்தவர்கள் லேசான காயங்களுடன் மீட்க்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story