Puducherry | கல்யாணத்திற்கு சென்று திரும்பும்போது கோரம்.. ஒரு நொடியில் பிரிந்த உயிர் - பகீர் காட்சி
நடைபாலம் மீது மோதிய கார் - பெண் பயிற்சி மருத்துவர் பலி
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் முன்புள்ள நடைபாலத்தின் மீது கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் பெண் பயிற்சி மருத்துவர் உயிரிழந்துள்ளார்.
தர்மபுரியை சேர்ந்த பெண் பயிற்சி மருத்துவர் ராஜலட்சுமி தனது பேராசிரியையின் திருமணத்தில் பங்கேற்க விழுப்புரம் சென்றுள்ளார். திருமண நிகழ்வை முடித்துவிட்டு, நண்பர்களுடன் புதுச்சேரியை சுற்றிப்பார்க்க சென்ற போது மறைமலையடிகள் சாலையில் அதிவேகமாக சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.. காரில் உடன் பயணித்த 4 பேரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன..
Next Story
