மாணவி மீது அசுரவேகத்தில் மோதிய கார்... தூக்கிவீசப்பட்ட அதிர்ச்சி
மழைக்கு நடுவே, சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்த ஒரு மாணவியின் மீது கார் ஒன்று மோதியதில், அம்மாணவி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு பகுதியில் முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர், பேருந்துக்காக காத்திருந்தபடி சாலையோரம் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அவ்வழியாக அசுர வேகத்தில் வந்த ஒரு காரானது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்ற மாணவியின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அந்த மாணவி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்த சூழலில், அதன் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியுள்ளது.
Next Story
