சினிமாவில் 13 ஆண்டுகள் - வாழ்த்து மழையில் எஸ்.கே

x

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கடந்ததயொட்டி ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். சின்னத்திரையில் கலக்கி 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான மெரினா படம் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன், கமர்ஷியல் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.

தொடக்கத்தில் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என டாப் கியரில் சென்றார் எஸ்.கே..

சில படங்கள் சறுக்கினாலும், அண்மையில் வெளியான அமரன் படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் கோலோச்சியது. பராசக்தி படம் மீது இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்