காலிஸ் ஒரு G.O.A.T கிரிக்கெட்டர் - பாண்டிங் புகழாரம்
தலைசிறந்த கிரிக்கெட் வீரராக தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜேக் காலிஸை (jaque kallis )ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (rickey ponting) தேர்வு செய்துள்ளார். podcast நிகழ்வில் ரிக்கி பாண்டிங்கிடம் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரிக்கி பாண்டிங், காலிஸ் தான் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் என்றும், மற்றவர்கள் குறித்து தனக்கு கவலை கிடையாது என்றும் கூறினார். டெஸ்ட் போட்டிகளில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்கள், 250க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை காலிஸ் எடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பாண்டிங், குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் காலிஸ் எனக் கூறியுள்ளார்.
Next Story