"10 நாள்கள் பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் மோகன்-ஜி" - என்ன இப்படி ஆகிடுச்சு..ஷாக்கான இயக்குனர்
இயக்குநர் மோகன்-ஜியை பழனி முருகன் கோயிலில் தூய்மை பணி மேற்கொள்ளவும், பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்தில் 10 நாள்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றவும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அறிவுறுத்தியிருக்கிறது. பார்க்கலாம் விரிவாக...
ருத்ர தாண்டவம், பகாசூரன் போன்ற திரைப்படங்களில் இயக்கி இயக்குநராக வலம் வருபவர் மோகன் - ஜி..
இவர் அண்மையில் பழனி பஞ்சாமிர்தம் குறித்து தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
இந்நிலையில், பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக தொடுக்கப்பட்ட புகாரில் மோகன் - ஜி கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்...
இந்த சூழலில், மோகன் -ஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நடைபெற்றது..
இதில், தமிழகம் முழுவதும் வெளியாகும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில், பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்..
கூடவே, பழனி கோயில் மீது உண்மையிலே அக்கறை இருந்தால் கோயிலில் தூய்மை பணி மேற்கொள்ளவும், பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்தில் 10 நாள்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றவும் நீதிபதி அறுவுறுத்தியிருக்கிறார்..
தொடர்ந்து, சமூக வலைதளங்களிலும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட உத்தரவிட்ட நீதிபதி, வாய் சொல் வீரராக இல்லாமல், எந்த ஒரு தகவலையும் உறுதி படுத்தாமல் தெரிவிக்க கூடாது எனவும் அறிவுறுத்தி நிபந்தனை ஜாமின் வழங்கியிருக்கிறார்...