உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித்... மத்திய அரசுக்கு பரிந்துரை

x

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை நியமிக்க பரிந்துரை

மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை

தலைமை நீதிபதியாக யு.யு.லலித் - பரிந்துரை

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு. லலித்தை நியமிக்க தலைமை நீதிபதி என்.வி. ரமணா மத்திய அரசுக்கு பரிந்துரை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை நீதிபதி அலுவலகத்துக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

மரபுப்படி தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையிலுள்ள மூத்த நீதிபதி, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.

இதன்படி நீதிபதி யு.யு. லலித் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்று பரிந்துரைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்