2 வெவ்வேறு இடங்களில் அரசு பேருந்து மீது கற்கள் வீசிய இளைஞர்கள் கோவையில் பயங்கரம்

x

கோவை டவுன் ஹாலில் இருந்து உக்கடம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது, நாஸ் தியேட்டர் அருகே பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இதேபோல், கணபதியில் இருந்து கோவைப்புதூர் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது, அடையாளம் தெரியாத இளைஞர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக, போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்