குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

காரைக்காலில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 20 வயது இளைஞர், மாவட்டத்திற்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.திருநகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சக்தி மீது, பல்வேறு அடிதடி, கொலை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் சிறை சென்று, நிபந்தனை ஜாமினில் வெளியில் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி அருகில், கஞ்சா விற்ற வழக்கில் சக்தி மீண்டும் கைது செய்யப்பட்டார். இவரால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து ஏற்படுவதால், சக்தியை மாவட்டத்தில் நுழைய தடை விதிக்க வேண்டும் என, காரைக்கால் மாவட்ட சார்பு கோட்ட நீதிபதியிடம் போலீசார் பரிந்துரை செய்திருந்தனர். இதன் பேரில் சக்தி, இரண்டு மாதத்திற்கு காரைக்கால் மாவட்டத்தில் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்