"இனி நீங்க எஸ்கேப் ஆக முடியாது" - வில்லங்கமான வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

x

வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் வசதி வரவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.இந்த புதிய அப்டேட் வாட்ஸ்-அப் பீட்டா (beta) பதிப்பில் சோதிக்கப்பட்டு பின்னரே வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்பில் பயனர்கள் ஒரு மெசேஜை அனுப்பிய பிறகு, அந்த மெசேஜை எடிட் செய்யும் வகையிலான அம்சம் வருகிறது. மேலும், அந்த குறிப்பிட்ட மெசேஜ் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை எதிர்முனையில் இருப்பவருக்கு தெரியப்படுத்தும் வகையில் 'Edited' என்று குறிக்கப்பட்டிருக்கும். இந்த எடிட் அம்சம் ஏற்கெனவே கடந்த சில மாதங்களாக சோதிக்கப்பட்டு வருகிறது என்றும், தற்போது முழுமை பெறும் வடிவத்திற்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வாட்ஸ் அப் எந்தெந்த சாதனத்தில் எல்லாம் இணைக்கப்பட்டுள்ளதோ, அவை அனைத்திலும் மெசேஜ்களை எடிட் செய்ய முடியும்.


Next Story

மேலும் செய்திகள்