உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்-சீனாவிடம் தோற்றுபாதியிலேயே வெளியேறிய இந்தியா

x

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஆடவர் அணி தோல்வியைத் தழுவியது. பலம் வாய்ந்த சீன அணியுடன் பலப்பரீட்சை நடத்திய இந்திய அணி, பூஜ்யத்துக்கு 3 என்ற கேம் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய வீரர்கள் ஹர்மீத் தேசாய், சத்யன் ஞானசேகரன், மனுஷ் ஷா ஆகிய மூவரும் நேர் செட்களில் சீன வீரர்களிடம் தோல்வி கண்டனர். இதனால், காலிறுதிக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.


Next Story

மேலும் செய்திகள்