தலை முடியை வெட்டி பெண்கள் நூதன போராட்டம்..ஈரானில் இளம்பெண் மரணம்

x

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததால் இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் மரணம் அடைந்த நிலையில், பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர்... மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தால் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.. இது குறித்து பாரபட்சமற்ற விசாரணை தேவை என்று ஐநா மனித உரிமைகள் ஆணையர் நடா அல்-நஷிப் வலியுறுத்தினார்.. மாஷா அமினியின் இறப்புக்கு நீதி கேட்டு பல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்... இந்நிலையில், பல பெண்கள் தங்கள் நீளமான தலைமுடியை வெட்டி மாஷாவுக்கு ஆதரவாக நூதன போராட்டத்தில் இறங்கியுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்