பழிக்கு பழி வாங்குமா இந்தியா? - பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

பழிக்கு பழி வாங்குமா இந்தியா? - பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
x

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா, 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெல்லியில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியுள்ளது. இன்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபடி மைதானத்தில், இரவு 7 மணிக்கு இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறப் போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்