பா.ஜ.க.வினரை மட்டும் கைது செய்வது ஏன்? - வானதி சீனிவாசன் கேள்வி

x

பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் குறித்து பேசும் திமுக, ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல், பா.ஜ.க.வினரை மட்டும் கைது செய்வது ஏன்? என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர்

பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டது குறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆ.ராசாவுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டங்கள் வெற்றி பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாமல், தி.மு.க. அரசு கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவுக்கு ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்