குஜராத், இமாச்சலில் யார் ஆட்சியை பிடிப்பார்கள்? கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

x

குஜராத், இமாச்சலில் யார் ஆட்சியை பிடிப்பார்கள்? கருத்துக்கணிப்பில் புதிய தகவல்


குஜராத், இமாச்சல பிரதேசம் தேர்தல்களில் பாஜகவே வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அங்கிருக்கும் நிலவரம் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியதில், இரு மாநிலங்களிலும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என ABP-CVoter தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 77 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும், தேர்தலில் அக்கட்சி 44 சீட்கள் வரையில் வெற்றிபெறலாம் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்திலும் அக்கட்சிக்கு இரண்டாவது இடமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமாநில தேர்தலிலும் ஆர்வம் காட்டும் ஆம் ஆத்மி வாக்குகளை பெற்றாலும், வெற்றியென பார்க்கையில் குஜராத்தில் 2 சீட்களை பெறலாம், இமாச்சல பிரதேசத்தில் அதுவும் கிடைக்காது என கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்