ஐபிஎல் 2023 ஏலம் எப்போது? - வெளியான சர்ப்ரைஸ் தகவல்

x

ஐபிஎல் 2023 ஏலம் எப்போது? - வெளியான சர்ப்ரைஸ் தகவல்

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர், அடுத்தாண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்கி நடைபெற உள்ளது. மீண்டும் ஹோம், அவே என்ற பழைய முறையில் நடைபெற உள்ள இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஐபிஎல் ஏலம், வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தமுறை மினி ஏலமாக நடைபெறும் என்றும், மினி ஏலத்துக்கான அணிகளின் தொகை 95 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்