விஜய் ஆண்டனிக்கு என்ன தான் ஆச்சு? - தீயாய் பரவும் ட்வீட்

x

படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வருவதாக நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பின் போது நேர்ந்த விபத்தில் தாடை மற்றும் மூக்கில் படுகாயமடைந்ததாக பதிவிட்டுள்ளார்.

இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ள விஜய் ஆண்டனி, விரைவில் ரசிகர்களுடன் உரையாடுவேன் என முகம் தெரியாதபடி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

உடல்நலத்தில் அக்கறை செலுத்திய அனைவருக்கும் நன்றி என நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்