கர்நாடக எல்லையில் என்ன நடக்கிறது? தமிழகத்துக்குள் வரும் ஆற்று நீரில் மாற்றம்...விவசாயிகள் அதிர்ச்சி

x

அணைக்கு விநாடிக்கு ஆயிரத்து 370 கனஅடி நீர் வரத்து வந்து : குவியல் குவியாக ஆற்றில் மிதந்து செல்லும் இரசாயன நுரைகள்

கர்நாடக மாநிலம் மற்றும் ஓசூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது தென்பெண்ணையாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று விநாடிக்கு 1,042 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், இன்று விநாடிக்கு 1,370 கனஅடி நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 1,308 கனஅடி நீர் அணையில் உள்ள 7 மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஒசூர் தென்பெண்ணை ஆற்றில் கரைபுறண்டு ஓடும் தண்ணீரில் குவியல் குவியலாக நுரைகள் பொங்கி செல்கிறது. இரசாயன கழிவுகள் அதிக அளவு வெளியேறி வருவதால் கடும் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்