"ஹிஜாப் அணிவது அத்தியாவசியமாக பின்பற்றப்படும் வழக்கம் அல்ல" - உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதம்

x

பள்ளி - கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கடந்த 2021 வரை எந்தவொரு மாணவியும் ஹிஜாப் அணியவில்லை என வாதிட்டார். மாணவிகள் யாரும் தாமாகவே ஹிஜாபை அணியவில்லை என்றும், குறிப்பிட்ட மதத்தினர் குறிப்பிட்ட உடையை மற்றும் அணிய கர்நாடக அரசின் அரசாணை தடை விதிக்கவில்லை என கூறினார்.

பிற சமூகத்தினர் காவி சால்வையை அணிந்து வந்த போது, அவையும் தடை செய்யப்பட்டுள்ளது என வாதம் செய்தார்.

ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அத்தியாவசியமாக பின்பற்றப்படும் வழக்கம் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை மனுதாரர்கள் முன் வைக்கவில்லை என்பன உள்ளிட்ட வாதங்களை முன் வைத்து நிறைவு செய்தார். விசாரணை இன்று புதன்கிழமை நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்