திருமணமாகாத விரக்தி..? | காவலர் எடுத்த விபரீத முடிவு

x

நெல்லை அருகே திருமணமாகாத விரக்தியில் காவலர் தீக்குளித்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள மணிமுத்தாறில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில், 29 வயதான தமிழ்ச்செல்வன் என்பவர் பணியாற்றி வருகிறார். பட்டாலியனில் உள்ள அறையில், தமிழ்ச்செல்வன் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தமிழ்ச்செல்வன் திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்