உக்ரைனின் அடிமடியில் கை வைத்த ரஷ்யா - தவிப்போடு வாழும் 15 லட்சம் உக்ரைனியர்கள்

x

உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருவதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படைகள் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதால் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த அக்டோபரில் இருந்து உக்ரைனிய எரிசக்தி கட்டமைப்புகளைக் குறி வைத்து ரஷ்யா தொடர் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யாவுக்கு ஈரான் ட்ரோன்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதை ஈரான் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்